செய்திகள்

லாரிகள் ஸ்டிரைக் எதிரொலி - பிரேசில் நகரத்தில் அவசரநிலை பிரகடனம்

Published On 2018-05-26 07:27 GMT   |   Update On 2018-05-26 07:27 GMT
லாரிகள் ஸ்டிரைக் எதிரொலியால் பிரேசில் நகரத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை பிரேசில் அதிபர் மைக்கேல் டெமர் பிறப்பித்துள்ளார். #MichelTemer #Lorrystrike

சாவ்பாங்லோ:

பிரேசில் நாட்டின் தொழில் நகரம் சாவ்பாவ்லோ. இங்கு லாரி மற்றும் வாகனங்களின் வேலைநிறுத்த போராட்டம் 5 நாட்கள் நடக்கிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து இப்போராட்டம் நடத்தப்படுகிறது.

லாரிகள் இயக்காமல் நடுரோடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சரக்குகள் ஏற்றிச் செல்லப்படாததால் பொருட்களுக்கு கட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எனவே நிலைமையை சமாளிக்க சாவ்பாவ்லோ நகரில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை பிரேசில் அதிபர் மைக்கேல் டெமர் பிறப்பித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து ரோடுகளில் நிறுத்தப்பட் டுள்ள லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசரநிலை பிரகடனம் குறித்து அதிபர் டெமர் டி.வி.யில் உரை நிகழ்த்தினார். #MichelTemer #Lorrystrike

Tags:    

Similar News