செய்திகள்

ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட ஐ.நா சபை உறுப்பினர் - அவரது மகன் விடுவிப்பு

Published On 2018-05-24 16:07 IST   |   Update On 2018-05-24 16:07:00 IST
மர்ம நபர்களால் ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட ஐ.நா சபை உறுப்பினர் மற்றும் அவரது மகன் இருவரும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். #UnitedNations
காபூல் : 

கடந்த ஜனவரி மாதம் 22-ம் தேதி ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஐக்கிய நாடுகள் சபையின் பெண் உறுப்பினர் மற்றும் அவரது மகன் காரில் சென்றுகொண்டிருந்த போது அவர்களை வழிமறித்து அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். கடத்தல் சம்பவத்தின் போது கார் ஓட்டுனர் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் கடந்த மார்ச் மாதம் மீட்கப்பட்டது.

இந்நிலையில் கடத்தி செல்லப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பெண் உறுப்பினர் மற்றும் அவரது மகன் இருவரும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து பேசிய ஆப்கானிஸ்தான் நாட்டின் ஐக்கிய நாடுகள் சபையின் செயல் தலைவர் இங்கிரிட் ஹெய்டன், இந்த கடத்தல் சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். கடத்தலின் போது எங்களில் ஒருவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் பணத்திற்காக நடக்கும் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த சில வருடங்களில் வெளிநாட்டினர் பலர் அங்கு கடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #UnitedNations
Tags:    

Similar News