செய்திகள்

பறக்கும் ரோபோட்டை உருவாக்கி இந்திய ஆராய்ச்சி மாணவர் சாதனை

Published On 2018-05-23 16:11 IST   |   Update On 2018-05-23 16:11:00 IST
பூச்சிகளை போன்ற பறக்கும் ரோபோட்டை உருவாக்கி இந்தியாவைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் யோகேஷ் சுக்கிவத் அறிவியல் துறையில் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார். #RoboFly
வாஷிங்டன்:

இந்தியாவின் மும்பை நகரைச் சேர்ந்த யோகேஷ் சுக்கிவத் என்ற வாலிபர் அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கழைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில், யோகேசின் கண்டுபிடிப்பு அறிவியல் துறையில் சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து பேசிய யோகேஷ், பூச்சு வடிவில் இருக்கும் இந்த பறக்கும் ரோபோட் பல பணிகளை செய்யும் திறன் கொண்டது. குறிப்பாக, வயல்களில் பயிர்களின் வளர்ச்சியை கண்காணிப்பது, கேஸ் டிக்கேஜை கண்டறிவது போன்ற பல பணிகளை செய்ய பயன்படும். ரோபோட்டில் பொருத்தப்பட்டுள்ள சிறிய இறக்கைகள் மூலம் இவை பறக்கும். இது மிகவும் சிறிய அளவில் இருப்பது இதன் சிறப்பு அம்சமாகும்.


மேலும், இதனை உருவாக்க மிக குறைந்த தொகை செலவானது. இதில் லேசர் கற்றை ஆற்றல் மூலமாக பயன்படுத்தப்படுகிறது. அதில் பொருத்தப்பட்டுள்ள எலக்ட்ரானிக் கருவி லேசர் ஆற்றலை மின்னாற்றலாக மாற்றி இறக்கைகள் இயங்க உதவுகிறது.

பூச்சி போன்று சிறய கம்பியில்லா பறக்கும் ரோபோட்கள் என்பது அறிவியலின் கற்பனையாக இருந்தது. அதனை மாற்றி இந்திய மாணவர் சாதனை படைத்துள்ளார். #RoboFly

Tags:    

Similar News