செய்திகள்

கொரியாவில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா மகிழ்ச்சியுடன் வாய்ப்பளிக்க வேண்டும் - சீனா

Published On 2018-05-17 08:47 IST   |   Update On 2018-05-17 08:47:00 IST
அணு ஆயுத சோதனைகளை கைவிட வடகொரியா ஒப்புக்கொண்டதை அடுத்து கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா மகிழ்ச்சியுடன் வாய்ப்பளிக்க வேண்டும் என சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி தெரிவித்துள்ளார்.
பீஜிங்:

சீனாவின் வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி அரசு முறை பயணமாக பாரிஸ் சென்றுள்ளார். அங்கு பேசிய அவர், அணு ஆயுத சோதனைகளை கைவிடுவதன் மூலம் வடகொரியா அமைதியை விரும்புவதாக தெரிவித்தார்.



அதற்கு இதர நாடுகளும் குறிப்பாக அமெரிக்கா கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட மகிழ்ச்சியுடன் வாய்ப்பளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். #koreanpeninsula #opportunityforpeace #wangyi
Tags:    

Similar News