செய்திகள்

பாரிஸ் கத்திக்குத்து தாக்குதலுக்கு பிரான்ஸ் அதிபர் கண்டனம்

Published On 2018-05-12 23:36 GMT   |   Update On 2018-05-12 23:36 GMT
பாரிசில் நடந்த கத்திக்குத்து தாக்குதலுக்கு அதிபர் எம்மானுவல் மெக்ரான் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு ஐ எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. #Knifeattack #emmanuelmacron
பாரிஸ்:

பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிசில் அமைந்துள்ள ஒபரா ஹவுஸ் அருகே மர்ம நபர் ஒருவர் கண்ணில் எதிர்ப்பட்ட நபர்களை கத்தியால் குத்தி தாக்குதலில் ஈடுபட்டான். இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், கோரத் தாண்டவத்தில் ஈடுபட்ட அந்த நபரை சுட்டுக் கொன்றனர்.



இந்த தாக்குதலுக்கு பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மெக்ரான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரத்தத்துக்கான விலையை பிரான்ஸ் மீண்டும் கொடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பாரிசில் நடந்த கத்திக்குத்து தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அந்த அமைப்பின் வலைத்தளத்தில், பாரிஸ் தாக்குதலுக்கு எங்கள் அமைப்பு தான் மூளையாக செயல்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. #Knifeattack #emmanuelmacron
Tags:    

Similar News