செய்திகள்

டிரம்புடனான சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது - கிம் ஜாங் அன்

Published On 2018-05-10 05:46 IST   |   Update On 2018-05-10 05:46:00 IST
அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார். #KimJongUn #Trump #Summit
பியாங்யாங்:

பரம விரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு சமீபத்தில் நடைபெற்றது.

இதற்கு முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் நேருக்குநேர் சந்தித்துப் பேச ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த சந்திப்பு நடைபெறும் தேதி மற்றும் இடம் ஆகியவை முடிவு செய்யப்படவில்லை.



இதற்கிடையே, வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் உடனான சந்திப்புக்கான நேரம் மற்றும் இடம் குறித்து மூன்று நாளில் அறிவிப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த சந்திப்பின் மூலம் இரு நாடுகளுக்கு நல்ல எதிர்காலம் உருவாகும் என தெரிவித்தார். #KimJongUn #Trump #Summit
Tags:    

Similar News