செய்திகள்

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜூலை மாதம் பிரிட்டன் செல்கிறார்

Published On 2018-04-27 05:25 IST   |   Update On 2018-04-27 05:25:00 IST
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜூலை மாதம் பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. #Trump
லண்டன்:

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் எண் 10, டவுனிங் தெருவில் பிரதமரின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜூலை மாதம் 13-ம் தேதி பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

பிரிட்டன் வரும் அதிபர் டிரம்ப் பிரதமர் தெரசா மேவை சந்தித்து பேசவுள்ளார். அப்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதுகுறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் விரைவில் பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன் என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. #Trump #Tamilnews

Similar News