செய்திகள்

லண்டன் பாலத்தில் பாதசாரிகள் மீது மோதிய வேன்: ஆயுதமேந்திய போலீசார் விரைவு

Published On 2017-06-04 06:04 IST   |   Update On 2017-06-04 06:04:00 IST
லண்டன் பாலத்தில் பாதசாரிகள் மீது வேன் மோதி விபத்து ஏற்படுத்தியதை அடுத்து, அப்பகுதிக்கு ஆயுதமேந்திய போலீசார் விரைந்துள்ளனர்.
லண்டன்:

லண்டன் மாநகரத்தின் மையப்பகுதியில் இருக்கும் லண்டன் பாலத்தின் அருகே பாதசாரிகள் மீது வேன் ஒன்று மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் மூன்று முறை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தை அடுத்து ஆயுதங்கள் ஏந்திய ஸ்காட்லாந்து யார்டு போலீசார் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.

நேற்று இரவில் நிகழ்ந்த விபத்தில் பாதசாரிகள் பலர் படுகாயமடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் லண்டன் நகரத்தில் வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது ஒரு தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ள லண்டன் மாநகர போலீசார், மேலும் தகவல்களை விரைவில் தெரிவிப்பதாக லண்டன் போலீஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளனர்.



முன்னதாக இரண்டு வாரங்களுக்கு முன்பு வடக்கு இங்கிலாந்தில் பாப் பாடகி ஏரியனா கிரேண்ட் நிகழ்ச்சியின் போது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்.

வருகிற 8-ஆம் தேதி லண்டனில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தாக்குதல், அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News