செய்திகள்

சீனாவில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்

Published On 2017-04-11 03:52 GMT   |   Update On 2017-04-11 03:52 GMT
பீஜிங் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அங்கு தமிழ் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் பீஜிங் நகரில் பணிபுரியும் தமிழர்கள், பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழ் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பீஜிங்:

சீன தலைநகர் பீஜிங் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பணிபுரியும் தமிழர்கள் சுமார் 70 பேர் சேர்ந்து கடந்த 2013-ம் ஆண்டு பீஜிங் தமிழ்ச் சங்கத்தை தொடங்கினார்கள். தற்போது அந்த சங்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

வருகிற 14-ந்தேதி தமிழ் புத்தாண்டு தினம் ஆகும். இந்த நிலையில் பீஜிங் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அங்கு தமிழ் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் பீஜிங் நகரில் பணிபுரியும் தமிழர்கள், அங்குள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழ் மாணவர்கள், சீன சர்வதேச வானொலியின் தமிழ் பிரிவில் பணியாற்றும் தமிழர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவில் கலைநிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

Similar News