செய்திகள்

ஐரோப்பிய பாராளுமன்ற தலைவராக அன்டோனியோ தஜனி தேர்வு

Published On 2017-01-18 04:20 GMT   |   Update On 2017-01-18 04:20 GMT
751 உறுப்பினர்களை கொண்ட ஐரோப்பிய பாராளுமன்ற தலைவராக இத்தாலியை சேர்ந்த அன்டோனியோ தஜனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஸ்டிராஸ்பர்க்:

ஐரோப்பிய பாராளுமன்றம் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்பாகும். இந்த பாராளுமன்றத்தில் 751 (முன்னதாக 766) நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்திய பாராளுமன்றத்தை அடுத்து உலகின் இரண்டாவது மிகப்பெரும் வாக்காளர்களைக் கொண்ட மக்களாட்சி அமைப்பாகவும் நாட்டு எல்லைகளைக் கடந்த மிகப் பெரிய மக்களாட்சி அமைப்பாகவும் ஐரோப்பிய பாராளுமன்ற விளங்குகின்றது.

இந்த பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்ய தகுதியுடைய வாக்காளர்களின் எண்ணிக்கை கடந்த 2009-ம் ஆண்டு நிலவரப்படி 50 கோடியாக இருந்தது.

751 உறுப்பினர்களை கொண்ட ஐரோப்பிய பாராளுமன்ற தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் பழமைவாத கட்சியின் சார்பில் போட்டியிட்ட இத்தாலியை சேர்ந்த அன்டோனியோ தஜனி வெற்றி பெற்றுள்ளார்.

அன்டோனியோ தஜனி 351 வாக்குகளையும் அவரை எதிர்த்து போட்டியிட்ட இத்தாலி நாட்டை சேர்ந்த சோஷலிஸ்ட் கட்சி வேட்பாளர் 282 வாக்குகளையும் பெற்றனர்.

Similar News