செய்திகள்

பல்கேரியா அதிபர் தேர்தலில் ரஷிய ஆதரவாளர் வெற்றி

Published On 2016-11-14 04:56 GMT   |   Update On 2016-11-14 04:56 GMT
ஐரோப்பா கண்டத்தில் உள்ள பல்கேரியா நாட்டின் அதிபர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் அந்நாட்டின் முன்னாள் விமானப்படை தளபதியும், ரஷிய ஆதரவாளருமான ருமென் ராடேவ் வெற்றி பெற்றுள்ளார்.
சோபியா:

பல்கேரியா நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் ஆளும்கட்சியின் சார்பில் ட்செட்க்கா ட்சச்சேவா-வும் அவரை எதிர்த்து அரசியலுக்கு புதுமுகமும் முன்னாள் விமானப்படை தளபதியுமான ருமென் ராடேவ்-ம் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. பதிவான சுமார் 90 சதவீதம் வாக்குகளின் முடிவுகளின்படி சுமார் ருமென் ராடேவ் 59.4 சதவீதம் வாக்குகளையும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஆளுங்கட்சி வேட்பாளர் ட்செட்க்கா ட்சச்சேவா 36.2 சதவீதம் வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

எனவே, பல்கேரியாவின் புதிய அதிபராக வரும் ஜனவரி மாதம் 22-ம் தேதி பதவி ஏற்பது உறுதியாகி விட்டது. வரும் ஐந்தாண்டுகள்வரை இந்தப் பதவியை வகிக்கும் இவர் ரஷியாவின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News