செய்திகள்

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு துபாயில் வாழும் தொழிலதிபர் ரூ.75 லட்சம் பரிசு

Published On 2016-08-21 11:16 IST   |   Update On 2016-08-21 11:16:00 IST
ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று பேட்மிண்டன் விளையாட்டில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுதந்த பி.வி.சிந்து, மல்யுத்தப் போட்டியில் வெண்கலம் வென்றுதந்த சாக்‌ஷி மலிக் ஆகியோருக்கு துபாயில் வாழும் பிரபல தொழிலதிபர் 75 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு அளிக்க தீர்மானித்துள்ளார்.
துபாய்:

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று பேட்மிண்டன் விளையாட்டில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுதந்த பி.வி.சிந்து, மல்யுத்தப் போட்டியில் வெண்கலம் வென்றுதந்த சாக்‌ஷி மலிக் ஆகியோருக்கு துபாயில் வாழும் பிரபல தொழிலதிபர் 75 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு அளிக்க தீர்மானித்துள்ளார்.

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த முக்கட்டு செபாஸ்டியன் அங்கு பண்ணை தொழில் நடத்தி வருவதுடன், பெங்களூரில் கார்களை வாடகைக்கு விடும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

துபாய் நாட்டிலும் சில தொழில்களை நடத்திவரும் இவர் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று பேட்மிண்டன் விளையாட்டில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுதந்த பி.வி.சிந்து, மல்யுத்தப் போட்டியில் வெண்கலம் வென்றுதந்த சாக்‌ஷி மலிக் ஆகியோருக்கு துபாயில் வாழும் பிரபல தொழிலதிபர் 75 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு அளிக்க முன்வந்துள்ளார்.



ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தி காட்டிய இந்த இரு வீராங்கனைகளையும் ரொக்கப் பரிசின் மூலமாக நான் கவுரவிக்க விரும்புகிறேன். நான் மிகப்பெரிய பணக்காரன் அல்ல; ஆனால், என்னால் இயன்றவரை ஏதாவது செய்ய விரும்புகிறேன்.

எனவே, பேட்மிண்டன் விளையாட்டில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுதந்த பி.வி.சிந்துவுக்கு 50 லட்சம் ரூபாயும், மல்யுத்தப் போட்டியில் வெண்கலம் வென்றுதந்த சாக்‌ஷி மலிக்குக்கு 25 லட்சம் ரூபாயும் அளிக்க தீர்மானித்துள்ளேன்.

இந்தியாவுக்கு பெருமை சேர்த்த இந்த வீராங்கனைகளை கவுரவிக்கும் வகையில் கேரள மாநிலம், கொச்சி நகரில் பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம். அந்த விழாவில் இவர்களுக்கான ரொக்கப் பரிசு வழங்கப்படும் என துபாயில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முக்கட்டு செபாஸ்டியன் தெரிவித்தார்.

Similar News