செய்திகள்

நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்: சவுதியில் ஜாகீர் நாயக் பேட்டி

Published On 2016-07-25 22:18 IST   |   Update On 2016-07-25 22:17:00 IST
இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக மோடியுடன் இணைந்து செயல்பட தயார் என சர்ச்சைக்கு ஆளாகியிருக்கும் மத போதகர் ஜாகீர் நாயக் தெரிவித்துள்ளார்.
ஜெட்டா:

தீவிரவாத்தை ஊக்குவிப்பதாக விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கும் மத போதகர் ஜாகீர் நாயக், சவுதியில் தங்கி இருக்கிறார். இவரை இந்தியா டுடே தொலைக்காட்சி நிருபர் பேட்டி எடுத்துள்ளார். இந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-

மீடியாக்கள் தான் என் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. இந்தியாவுக்கு வர பயமா என்றால், எனக்கு பயம் இல்லை. இதுவரை ஒரு இந்திய அரசு அதிகாரிகூட என்னைத் தொடர்புகொள்ளவில்லை. எனவே ஊடகங்கள் நடத்தும் விசாரணைக்கு நான் வரத்தேவையில்லை.

நான் எப்போதும் வன்முறையை தூண்டும் பேச்சு பேசியது கிடையாது. எப்போதும் மனித நேயத்தை வலியுறுத்தியே பேசியுள்ளேன். இந்திய ஊடகங்கள் என்னைப் பற்றி தவறாக சித்தரிக்கின்றன. பிரதமர் மோடி இந்து-முஸ்லிம் சமூகத்துக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்க முயன்றால், நான் அதில் முழுமையாக செயல்பட தயார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Similar News