செய்திகள்

நாளுக்கு நாள் பப்ஜி விளையாடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

Published On 2018-12-19 09:57 GMT   |   Update On 2018-12-19 11:46 GMT
உலகம் முழுக்க ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரில் சுமார் 20 கோடி பேர் டவுன்லோடு செய்து, தினமும் சுமார் மூன்று கோடி பேர் விளையாடும் மொபைல் கேம் பற்றி பார்ப்போம். #PUBGmobile #gaming



பப்ஜி மொபைல் கேம் விளையாடுவோர் எண்ணிக்கை மூன்று கோடியாக அதிகரித்துள்ளது என பப்ஜி உருவாக்கிய பப்ஜி கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுக்க பப்ஜி விளையாடுவோரின் எண்ணிக்கை இது என்றாலும், இதில் சீனா மட்டும் சேர்க்கப்படவில்லை.

இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் பப்ஜி விளையாடுவோர் எண்ணக்கை அதிகரித்து வருகிறது. குறைந்த மெமரி கொண்ட ஆண்ட்ராய்டு சாதனங்களிலும் பப்ஜி மொபைல் விளையாட முடியும் என்பதால், இந்த கேம் அதிக பிரபலமாக முக்கிய காரணமாக மாறியிருக்கிறது.

பப்ஜி மொபைல் கேமினை உலகம் முழுக்க சுமார் 20 கோடி பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர். தினசரி பப்ஜி மொபைல் விளையாடுவோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பது இந்த கேம் பிரபலமாக முக்கிய காரணமாக இருக்கிறது. சில சந்தைகளில் ஃபோர்ட்நைட் பயனர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்றாலும், பப்ஜி மொபைல் கேம் இதனை பின்தள்ளி இருக்கிறது.



குறிப்பாக ஃபோர்ட்நைட் கேமினை பதிவு செய்து விளையாடுவோர் எண்ணிக்கை 20 கோடியாக இருக்கிறது. ஃபோர்ட்நைட் மற்றும் பப்ஜி மொபைல் பிரபலமாக இருக்கும் நிலையில், சமீபத்தில் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் அதிக வருவாய் ஈட்டும் கேமாக பப்ஜி மொபைல் ஃபோர்ட்நைட் கேமினை பின்தள்ளியது. 

சென்சார் டவர் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி ஆசியா மற்றும் சீன சந்தைகளில் பப்ஜி மொபைல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் பப்ஜி மொபைல் பிரபலமானதாக இருக்கும் நிலையில், கணினி மற்றும் கன்சோல்களில் இந்தியா போன்ற சந்தைகளில் பிரபலமாக இருக்கிறது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் பப்ஜி மொபைலில் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்படுகி்ன்றன. பப்ஜி மொபைல் பல்வேறு இயங்குதளங்களில் சீராக இயங்கும் படி மிக நேர்த்தியாக வழங்கப்படும் நிலையில், ஃபோர்ட்நைட் பல்வேறு சாதனங்களில் விளையாட ஏதுவாக ஆப்டிமைஸ் செய்யப்படவில்லை.
Tags:    

Similar News