செய்திகள்

விரைவில் வெளியாகும் வாட்ஸ்அப் விண்டோஸ் டெஸ்க்டாப் ஆப்

Published On 2018-06-18 05:36 GMT   |   Update On 2018-06-18 05:36 GMT
விண்டோஸ் இயங்குதள டெஸ்க்டாப் சாதனங்களில் வேலை செய்யும் படி வாட்ஸ்அப் செயலி உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருநிறுவனங்கள் இணைந்து டெஸ்க்டாப் செயலியை உருவாக்குவதாக கூறப்படுகிறது.

வாட்ஸ்அப் விண்டோஸ் போன் செயலியில் சீரான அப்டேட் வழங்கப்படும் நிலையில், விண்டோஸ் சென்ட்ர் வெளியிட்டிருக்கும் தகவல்களில் விரைவில் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலி விரைவில் வெளியிடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் செயலிக்கான யுனிவர்சல் விண்டோஸ் பிளாட்ஃபார்ம் (Universal Windows Platform -UWP) கான்செப்ட் ஆர்ட் முழுமையாக அகற்றப்படும் முன் பெஹான்ஸ் மூலம் லீக் ஆகியுள்ளது. இது UWP வடிவமைப்பு சார்ந்த அக்ரிலிக் டிரான்ஸ்பேரென்சி கொண்ட விண்டோஸ் செயலி போன்று காட்சியளிப்பதாக கூறப்படுகிறது.

இத்துடன் இந்த செயலியை உருவாக்க வாட்ஸ்அப் மற்றும் மைக்ரோசாஃப்ட் இணைந்து தொடர் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலி ஒன்று பயன்படுத்தப்படுகிறது. எனினும் இது வாட்ஸ்அப் வெப் செயலியாகவே இருக்கிறது.

வாட்ஸ்அப் வெப் ஆப் பல்வேறு வசதிகளை வழங்கினாலும், வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதிகளை வழங்கவில்லை. புதிய ((UWP) திட்டத்தின் கீழ் அனைத்து அம்சங்களும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News