செய்திகள்
க்ரிப்டோகரென்சியில் உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியானது
க்ரிப்டோகரென்சி எனப்படும் இணைய கள்ளப்பண சந்தையின் பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டிருக்கிறது.
சான்ஃபிரான்சிஸ்கோ:
இணைய கள்ளசந்தையில் பயன்படுத்தப்படும் க்ரிப்டோகரென்சி (கள்ளப்பணம்) மதிப்பு கடந்த ஆண்டு இறுதியில் வரலாறு காணத வகையில் உயர்வை கண்டது.
பிளாக்செயின் தொழில்நுட்பங்களை கொண்டு இணையத்தில் ஈட்டப்படும் க்ரிப்டோகரென்சிக்கள் முறைப்படுத்தப்படாத நிலையில் பிட்காயின் என்ற க்ரிப்டோகரென்சியின் மதிப்பு கடந்த ஆண்டு இறுதியில் உச்சத்தை தொட்டது. எனினும் சமீப காலங்களில் இதன் மதிப்பு குறைந்திருக்கிறது.
வணிக சந்தையில் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட க்ரிப்டோகரென்சி சந்தையில் பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டு உள்ளது.
ஃபோர்ப்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் 1,500 க்ரிப்டோசொத்துக்கள் இருக்கின்றன. இவற்றின் மதிப்பு 55,000 கோடி அமெரிக்க டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
இது 2017-ம் ஆண்டை விட 31 மடங்கு அதிகம் ஆகும். 2017-ம் ஆண்டு நிலவரப்படி பிட்காயின், எதெரியம் மற்றும் எக்ஸ்.ஆர்.பி. போன்ற பிரபல க்ரிப்டோகரென்சிக்களின் தினசரி வர்த்தக மதிப்பு சராசரியாக 14,409 மடங்கு வரை இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிப்பிள் நிறுவன இணை நிறுவனர் க்ரிஸ் லார்சென் 750 முதல் 800 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய க்ரிப்டோகரென்சிக்களுடன் அதிக க்ரிப்டோகரென்சி வைத்திருப்போர் பட்டியலில் உலகளவில் முதலிடம் பிடித்திருக்கிறார்.
இந்த பட்டியலில் ஜோசப் லூபின் 100 முதல் 500 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள க்ரிப்டோகரென்சிகளை வைத்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவரைத் தொடர்ந்து சாங்பெங் சௌ 110 முதல் 200 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய க்ரிப்டோகரென்சிக்களை வைத்திருக்கிறார்.
கேமரூன் மற்றும் டெய்லர் விங்கில்வோஸ் 90 லட்சம் முதல் 110 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய க்ரிப்டோகரென்சிக்களும், மேத்யூ மெல்லான் 90 லட்சம் முதல் 110 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய க்ரிப்டோகரென்சிக்களுக்கு அதிகபதிகளாக உள்ளனர் என ஃபோர்ப்ஸ் பட்டியல் தெரிவிக்கிறது.