செய்திகள்
புதிய நிறத்தில் அசத்தும் ஒன்பிளஸ் 5T: இந்தியாவில் வெளியானது
ஒன்பிளஸ் நிறுவனத்தின் சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 5T புதிய நிறத்தில் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 5T லாவா ரெட் ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் புதிய நிறம் கொண்ட ஒன்பிளஸ் 5T இந்தியாவிலும் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனின் முன்பக்க பெசல்களில் கருப்பு நிறமும், பக்கவாட்டுகள் மற்றும் பின்புறம் சிவப்பு நிறம் கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் எடிஷன் இந்தியாவிலும் சான்ட்ஸ்டோன் வைட் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனில் புதிய நிறம் தவிர மற்ற சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
ஒன்பிளஸ் 5T சிறப்பம்சங்கள்:
- 6.01 இன்ச் 2106x1080 பிக்சல் ஃபுல் எச்டி+ ஆப்டிக் AMOLED 2.5D வளைந்த டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- 2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 64-பிட் 10nm பிராசஸர்
- அட்ரினோ 540 GPU
- 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபிஇன்டெர்னல் மெமரி
- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் சார்ந்த ஆக்சிஜன்ஓ.எஸ். 4.7, ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட்
- டூயல் சிம் ஸ்லாட்
- 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ், சோனி IMX398, f/1.7 அப்ரேச்சர், 1.12μm பிக்சல்
- 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.7 அப்ரேச்சர், சோனி IMX376K, 1.0μm பிக்சல்
- 16 எ்மபி செல்ஃபி கேமரா, சோனி IMX371 சென்சார், 1.0μm பிக்சல், f/2.0 அப்ரேச்சர்
- கைரேகை ஸ்கேனர்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3300 எம்ஏஎச் பேட்டரி, டேஷ் சார்ஜ்
ஒன்பிளஸ் 5T லாவா ரெட் எடிஷன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரியுடன் கிடைக்கிறது. இந்தியாவில் லாவா ரெட் எடிஷன் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனின் விலை ரூ.37,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் விற்பனை ஜனவரி 20-ம் தேதி முதல் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.
ஒன்பிளஸ் 5T லாவா ரெட் ஸ்மார்ட்போனின் அறிமுக வீடியோவினை கீழே காணலாம்..,