செய்திகள்

புதிய நிறத்தில் ஒன்பிளஸ் 5T, விரைவில் வெளியீடு?

Published On 2017-12-31 15:18 IST   |   Update On 2017-12-31 15:18:00 IST
ஒன்பிளஸ் நிறுவனத்தின் சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 5T புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:

ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிரபல சான்ட்ஸ்டோன் நிற ஸ்மார்ட்போன் விரைவில் வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் ஒன்பிளஸ் 1 மற்றும் ஒன்பிளஸ் 2 ஸ்மார்ட்போன்கள் சான்ட்ஸ்டோன் நிறத்தில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ஒன்பிளஸ் நிறுவனத்தின் சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 5T சான்ட்ஸ்டோன் நிறத்தில் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள டீசர் வீடியோவில் மர்ம பெட்டியை ஒருவர் கையில் வைப்பது போல் படமாக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் டீசர் வீடியோவில் பொது மக்கள் மர்ம பெட்டியில் கையை நுழைத்து, அதில் என்ன இருக்கிறது என்பதை உணர்ந்து தெரிவிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. வீடியோவில் மர்ம பொருளை தொட்டு தழுவி உணர்ந்தவர்கள் மென்மை, அமைப்பு, கல், திடமான பொருள் போன்ற வார்த்தைகளை தெரிவித்துள்ளனர். ஜனவரி 2018-இல் மர்மத்தை தெரிந்து கொள்வோம் என்ற வாசகத்துடன் வீடியோ நிறைவுறுகிறது.



கடந்த ஆண்டு ஒன்பிளஸ் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 3 ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் அதிகம் விரும்பப்பட்ட சான்ட்ஸ்டோன் ஃபினிஷ் அகற்றப்பட்டது. சமீபத்தில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக மிட்நைட் பிளாக் நிறத்தில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டது. இத்துடன் ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் எடிஷன் வெள்ளை நிறத்தில் அறிமுகம் செய்தது.

தற்சமயம் ஒன்பிளஸ் வெளியிட்டுள்ள டீசர் வீடியோவில் புதிய ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனின் சான்ட்ஸ்டோன் பதிப்பு தயாரிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் ஜனவரி மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஒன்பிளஸ் 5T சான்ட்ஸ்டோன் பதிப்பு சார்ந்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.



ஒன்பிளஸ் 5T சிறப்பம்சங்கள்:

- 6.01 இன்ச் 2106x1080 பிக்சல் ஃபுல் எச்டி+ ஆப்டிக் AMOLED 2.5D வளைந்த டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- 2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 64-பிட் 10nm பிராசஸர்
- அட்ரினோ 540 GPU
- 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபிஇன்டெர்னல் மெமரி
- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் சார்ந்த ஆக்சிஜன்ஓ.எஸ். 4.7, ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட்
- டூயல் சிம் ஸ்லாட்
- 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ், சோனி IMX398, f/1.7 அப்ரேச்சர், 1.12μm பிக்சல்
- 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.7 அப்ரேச்சர், சோனி IMX376K, 1.0μm பிக்சல்
- 16 எ்மபி செல்ஃபி கேமரா, சோனி IMX371 சென்சார், 1.0μm பிக்சல், f/2.0 அப்ரேச்சர்
- கைரேகை ஸ்கேனர்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3300 எம்ஏஎச் பேட்டரி, டேஷ் சார்ஜ்

ஒன்பிளஸ் நிறுவனம் சார்பில் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள டீசர் வீடியோவை கீழே காணலாம்..,


Similar News