செய்திகள்

பட்ஜெட் விலையில் 18:9 டிஸ்ப்ளே, டூயல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

Published On 2017-12-19 15:11 IST   |   Update On 2017-12-19 15:11:00 IST
டூயல் பிரைமரி கேமரா, 18:9 டிஸ்ப்ளே கொண்ட விஷன் 3 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

அமெரிக்க ஸ்மார்ட்போன் நிறுவனமான இன்ஃபோகஸ் இந்தியாவில் விஷன் சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய இன்ஃபோகஸ் விஷன் 3 ஸ்மார்ட்போன் 18:9 ரக டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. மேலும் இத்தகைய டிஸ்ப்ளே கொண்ட விலை குறைந்த சாதனமாக வெளியிடப்பட்டுள்ளது.

மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் இன்ஃபோகஸ் விஷன் 3 ஸ்மார்ட்போன் 5.7 இன்ச் டிஸ்ப்ளே, 1440x720 பிக்சல் 18:9 ரக ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது.



இன்ஃபோகஸ் விஷன் 3 சிறப்பம்சங்கள்:

- 5.7 இன்ச், எச்டி + 18:9 டிஸ்ப்ளே
- குவாட்கோர் மீடியாடெக் MT6735 சிப்செட்
- 2 ஜிபி ரேம்
- 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 13 எம்பி + 5 எம்பி டூயல் பிரைமரி கேமரா
- 8 எம்பி செல்ஃபி கேமரா
- ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
- 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத்
-  4000 எம்ஏஎச் பேட்டரி

டூயல் கேமரா அமைப்பு கொண்டிருக்கும் இன்ஃபோகஸ் விஷன் 3 ஸ்மார்ட்போன் பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்தியாவில் ரூ.6,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் விஷன் 3 ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை நாளை மதியம் 12.00 மணிக்கு நடைபெறுகிறது. இன்ஃபோகஸ் விஷன் 3 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.

Similar News