செய்திகள்

சியோமி Mi A1 ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

Published On 2017-12-19 11:02 IST   |   Update On 2017-12-19 11:02:00 IST
சியோமி நிறுவனத்தின் Mi A1 ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் பிலிப்பைன்ஸ்-ஐ தொடர்ந்து இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

சியோமி நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் சியோமி Mi A1 இந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. பிளாக், கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் வெளியிடப்பட்ட Mi A1 ஸ்மார்ட்போனின் உண்மை விலையில் இருந்து ரூ.1000 நிரந்தரமாக குறைக்கப்பட்டது.

விலை குறைப்பை தொடர்ந்து Mi A1 ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய சிவப்பு நிற Mi A1 ஸ்மார்ட்போன் முன்னதாக பிலிப்பைன்ஸ்-இல் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நிறம் தவிர மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.



சியோமி Mi A1 சிறப்பம்சங்கள்:

- 5.5 இன்ச் ஃபுல் எச்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 ஆக்டாகோர் பிராசஸர்
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- 12 எம்பி + 12 எம்பி பிரைமரி கேமரா
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- ஸ்டாக் ஆண்ட்ராய்டு 7.1.1 மற்றும் MiUI
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3080 எம்ஏஎச் பேட்டரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- கைரேகை ஸ்கேனர்



புதிய Mi A1 ஸ்மார்ட்போனில் ஆயிரக்கணக்கான தொலைகாட்சிகளுடன் இணைக்கும் வசதி, செட் டாப் பாக்ஸ், குளிர்சாதன பெட்டி, ஸ்பீக்கர்கள் மற்றும் பல்வேறு சாதனங்களின் சப்போர்ட் வழங்கப்படுகிறது. சியோமி Mi A1 சிவப்பு நிற மாடல் Mi.com, பிளிப்கார்ட், Mi ஹோம் ஸ்டோர் மற்றும் சில விற்பனையாளர்களிடம் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் சியோமி Mi A1 ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனின் விற்பனை டிசம்பர் 20-ம் தேதி பிளிப்கார்ட் மற்றும் சியோமி அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆன்லைன் மட்டுமின்றி சியோமி Mi A1 சிவப்பு நிற ஸ்மார்ட்போன் Mi ஹோம் ஸ்டோர், Mi ஒப்பந்தமிட்டுள்ள விற்பனை மையங்கள் மற்றும் இதர விற்பனையாளர்களிடமும் விற்பனை செய்யப்படுகிறது.

Similar News