தமிழ்நாடு செய்திகள்

எஸ்.எஸ்.எல்.சி. படித்து இருந்தால் போதும்: ரெயில்வேயில் 32,428 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

Published On 2025-02-11 07:39 IST   |   Update On 2025-02-11 07:39:00 IST
  • விண்ணப்பத்தாரர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 36 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • பணியிடங்களுக்கு ஆரம்ப சம்பளம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து தொடங்குகிறது.

சென்னை:

இந்திய ரெயில்வே துறை, நாடு முழுவதும் உள்ள 32 ஆயிரத்து 428 காலிப்பணியிடங்களை ரெயில்வே பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப உள்ளது. அதில் தமிழகத்திற்கு உட்பட்ட தென்னக ரெயில்வேயில் மட்டும் 2,694 பணியிடங்கள் உள்ளன. அதற்கான அறிவிப்பு https://www.rrbchennai.gov. in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு கல்வி தகுதி எஸ்.எஸ்.எல்.சி. படித்து இருந்தால் போதுமானது.

விண்ணப்பத்தாரர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 36 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு ஆரம்ப சம்பளம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து தொடங்குகிறது. அதில் பெண்கள், முன்னாள் படைவீரர்கள், ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர், சிறுபான்மையினர் ஆகியோர் ரூ.250 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வருகிற 22-ந்தேதி கடைசிநாளாகும்.

Tags:    

Similar News