தமிழ்நாடு செய்திகள்

உலக மீன்வள தின கொண்டாட்டம்: நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

Published On 2025-11-26 19:32 IST   |   Update On 2025-11-26 20:55:00 IST
  • நவம்பர் 21-ஆம் நாள் 'உலக மீன்வள தினமாக' உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது.
  • மீனவர் கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.

உலக மீன்வள தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ஆண்டுதோறும் நவம்பர் 21-ஆம் நாள் 'உலக மீன்வள தினமாக' உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. 2025-ம் ஆண்டின் உலக மீன்வள தினம் "கடல் உணவுப் பொருள் ஏற்றுமதியில் மதிப்புக்கூட்டுதலை வலுப்படுத்துதல்" ('Strengthening the value addition in Seafood exports)' என்ற கருப்பொருளின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் உலக மீன்வள தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இன்று சென்னை நந்தனத்தில் அனமந்துள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துனற இயக்குநர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு, மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துனற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையேற்று, மாநிலத்தின் சிறந்த உள்நாட்டு மீன்வளர்ப்போர், சிறந்த வண்ண மீன் வளர்ப்போர், கடலில் மிதவை கூண்டுகளில் மீன்வளர்ப்போர், சிறந்த மேலாண்மை நடைமுறையினை பின்பற்றும் மீன்பிடி துனறமுகம், சிறந்த மீனவர் கூட்டுறவு சங்கம், தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தினை திறம்பட செயல்படுத்திய பணியாளர்கள் குழு, சிறந்த விற்பனையாளர் (TNFDC) ஆகிய பிரிவுகளின் கீழ் விருதுகளை வழங்கினார்.

தொடர்ந்து, தமிழ்நாடு மீனவர் நலவாரிய பயனாளர்களுக்கும், நன்னீர் மீன் வளர்ப்புக்கான குளங்களின் கட்டுமானம் மற்றும் உள்ளீடுகள் / இடு பொருட்களுக்கான மானியம், சிறிய உயிர்கூழ்ம (பயோபிளாக்) குளங்கள் அமைத்து மீன் வளர்ப்பிற்கான மானியம், குளிர்காப்பிடபட்ட நான்குசக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மீனவர் கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியில், அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீனவர் நல வாரிய தலைவராக நியமிக்கப்பட்ட ஜோசப் ஸ்டாலினை அவரது இருக்கையில் அமர வைத்தனர்.

Tags:    

Similar News