தமிழ்நாடு செய்திகள்

மூலகொத்தளம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் லிப்டில் சிக்கி தவித்த பெண்கள்

Published On 2025-08-28 12:41 IST   |   Update On 2025-08-28 12:41:00 IST
  • அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு லிப்டில் 2 பெண்கள் வந்தனர்.
  • உரிய பராமரிப்பு இல்லாததால் லிப்டில் அடிக்கடி பழுதாகி நின்று விடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

திருவொற்றியூர்:

சென்னை, மூலக்கொத்தளம் ராமதாஸ் நகரில் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. சுமார் 1,440 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வீடுகள் ஒதுக்கப்பட்டு பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு லிப்ட் வசதியும் உள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு லிப்டில் 2 பெண்கள் வந்தனர். திடீரென அந்த லிப்ட் பழுதாகி நடுவழியில் நின்றது. இதனால்அதிர்ச்சி அடைந்த பெண்கள் பயத்தில் கூச்சலிட்டு அலறினர்.

சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் லிப்டின் கதவை நீண்ட நேரம் போராடி உடைத்தனர். பின்னர் லிப்டிடுக்குள் சிக்கி இருந்த 2 பெண்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். உரிய பராமரிப்பு இல்லாததால் லிப்டில் அடிக்கடி பழுதாகி நின்று விடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து குடியிருப்பில் வசிக்கும் மக்கள் கூறும்போது, ஒரு அவசரத்திற்கு கூட இந்த லிப்டை பயன்படுத்த முடியவில்லை. இதனை சரியாக பராமரிப்பது இல்லை. அடிக்கடி இது போன்று நாங்கள் லிப்டில் சிக்கிய கொள்கிறோம். லிப்டில் செல்லும் போதெல்லாம் அச்சத்தோடு செல்ல வேண்டி உள்ளது.

இதற்கிடையே லிப்ட்டில் சிக்கி பெண்களை அப்பகுதி மக்கள் கதவை உடைத்து மீட்கும் காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

Similar News