அரசு ஏன் டாஸ்மாக் கடைகளை நடத்த வேண்டும்?- உயர்நீதிமன்றம் மதுரை கிளை காட்டம்..!
- ஒரு பக்கம் டாஸ்மாக் கடைகள் திறந்துவிட்டு, மறுபக்கம் போதை மறுவாழ்வு மையங்களை அமைப்பதா?.
- மதுபானக் கடைகளை மூடுவதற்கு வாக்குறுதி அளித்தாலும், அதை யாரும் நிறைவேற்றுவதில்லை.
மதுரை கைத்தறி நகரில் டாஸ்மாக் கடையை திறப்பதற்கு தடைவிதித்து உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் "ஒரு பக்கம் டாஸ்மாக் கடைகள் திறந்துவிட்டு, மறுபக்கம் போதை மறுவாழ்வு மையங்களை அமைப்பதா?. ரம்மி விளையாட்டை முறைப்படுத்திய அரசு, டாஸ்மாக் கடைகளில் வேறு நிலைப்பாடு கொண்டுள்ளது. டாஸ்மாலக் கடையை நடத்துவது அரசின் வேலையா?. அரசு ஏன் நடத்த வேண்டும்?. அரசின் பணி இல்லை. எதற்காக மது விற்பனை செய்கிறீர்கள். மதுபானக் கடைகளை மூடுவதற்கு வாக்குறுதி அளித்தாலும், அதை யாரும் நிறைவேற்றுவதில்லை.
ரம்மி, மது இரண்டும் கொலை செய்வதுதான். மதுவே ஊழல் போன்ற பல பிரச்சினைகளுக்கு காரணம். வேலைவாய்ப்பு, பொது நலன் போன்றவற்றில் அரசு கவனம் செலுத்தில் நல்லது செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளனர்.