தமிழ்நாடு செய்திகள்

வைகை அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

Published On 2025-09-18 10:11 IST   |   Update On 2025-09-18 10:11:00 IST
  • வைகை அணையிலிருந்து அமைச்சர் மூர்த்தி தண்ணீர் திறந்து வைத்தார்.
  • மதுரை, சிவகங்கை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள ஒருபோக பாசனப் பரப்பாகிய 85 ஆயிரத்து 563 ஏக்கர் நிலங்களுக்கும் மற்றும் திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசனப் பரப்பாகிய 19 ஆயிரத்து 439 ஏக்கர் நிலங்களுக்கும் ஆக மொத்தம் சேர்த்து 1 லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்களுக்கும் வினாடிக்கு 1,130 கன அடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு 8 ஆயிரத்து 493 மில்லியன் கன அடி தண்ணீரை இன்று முதல் வைகை அணையிலிருந்து திறந்துவிடுவதற்கு அரசு ஆணையிட்டு உள்ளது.

இதனால் மதுரை, சிவகங்கை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி, வைகை அணையில் இருந்து ஒரு போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ஒரு போக பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து அமைச்சர் மூர்த்தி தண்ணீர் திறந்து வைத்தார். 

Tags:    

Similar News