செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் நினைவுநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
- வ.உ.சிதம்பரனாரை பெருமைப்படுத்தும் விதமாக கப்பலோட்டிய தமிழரின் 150-வது பிறந்தநாள் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது.
- வ.உ.சி. எழுதிய நூல்கள், கையெழுத்துப் பிரதிகள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டு சிறப்பு இணையப் பக்கம் உருவாக்கம்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-
* திராவிட மாடல் அரசில் வ.உ.சிதம்பரனாரை பெருமைப்படுத்தும் விதமாக கப்பலோட்டிய தமிழரின் 150-வது பிறந்தநாள் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது.
* வ.உ.சி. பெயரில் 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையுடன் சிறப்பு விருது அறிவிப்பு.
* கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் வ.உ.சி.யின் சிலை திறப்பு மற்றும் அவர் சிறையில் இழுத்த செக்கு பொலிவூட்டப்பட்டது.
* கோவை வ.உ.சி. பூங்காவில் திருவுருவச் சிலை திறப்பு.
* வ.உ.சி.யின் 150-வது ஆண்டில் நெல்லை, தூத்துக்குடியில் உருவாகும் அனைத்துக் கட்டடங்களுக்கும் அவரது பெயர் சூட்டல்.
* வ.உ.சி.யின் 85-வது நினைவு நாள் 'தியாகத் திருநாள்'. தூத்துக்குடி மேற்கு பெரிய காட்டன் சாலை வ.உ.சி. சாலை எனப் பெயர் மாற்றம்.
* வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நகரும் புகைப்படக் கண்காட்சி.
* வ.உ.சி. பன்னூல் திரட்டு, வ.உ.சி. திருக்குறள் உரை, வ.உ.சி. 150 சிறப்பு மலர் மற்றும் மடிப்பேடு வெளியீடு.
* வ.உ.சி. எழுதிய நூல்கள், கையெழுத்துப் பிரதிகள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டு சிறப்பு இணையப் பக்கம் உருவாக்கம்.
* 1908 திருநெல்வேலி எழுச்சிக்கு நினைவுச் சின்னம் அறிவிக்கப்பட்டது.
தம் உயிரையும் உணர்வையும் தமிழுக்காகவும் இந்திய விடுதலைக்காகவும் அளித்த தியாகத் திருவுருவான வ.உ.சி. பெருமையை அனைத்து வகையிலும் போற்றி வரும் நமது திராவிட மாடல் அரசின் சார்பில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. நினைவுநாளில் அவரை வணங்கிப் போற்றுகிறேன். வாழ்க வ.உ.சி.!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.