தமிழ்நாடு செய்திகள்
துணைவேந்தர் நியமனம் விவகாரம்- அரசுக்கு வழங்கிய சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை
- தமிழக அரசின் ஆட்சேபத்தை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
- வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக துணை வேந்தர்களை அரசே நியமிக்கும் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நெல்லையை சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.
இந்நிலையில், பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கிய சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துணைவேந்தர் நியமன அதிகாரம் விவகாரத்தில் தமிழக அரசின் ஆட்சேபத்தை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
இடைக்கால தடை விதிக்கக்கூடாது என தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தடை விதித்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வு உத்தரவிட்டுள்ளனர்.
இதைதொடர்ந்து, இந்த வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.