தமிழ்நாடு செய்திகள்

முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்த திருமாவளவன்

Published On 2024-12-09 13:39 IST   |   Update On 2024-12-09 14:52:00 IST
  • விசிக கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம் செய்யப்பட்டார்.
  • தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற்றது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், இன்று தொடங்கிய சட்டசபை கூட்டத்தில் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இன்றைய பேரவை கூட்டத்தைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்திற்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.

முன்னதாக தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதாக குற்றம்சாட்டப்பட்ட விசிக துணை பொதுச் செயலாளலர் ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் இருந்து ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News