சினிமா செய்திகள்
null

"வா வாத்தியார்" படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல்..!

Published On 2025-12-10 16:45 IST   |   Update On 2025-12-10 16:45:00 IST
வா வாத்தியார் திரைப்படத்தை அனைத்து ஓடிடி தளங்களிலும் வெளியிட அனுமதி இல்லை.

'மெய்யழகன்' படத்தைத் தொடர்ந்து, நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' என்ற படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார். கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். சத்யராஜ், ராஜ்கிரண் உள்பட பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டீசரும், பாடல்களும் ஏற்கனவே வெளியாகி கவனம் ஈர்த்தன. இப்படம் வரும் 12ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

இந்நிலையில், ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கடனாக பெற்ற ரூ.21 கோடியை ஞானவேல் ராஜா திருப்பிச் செல்லும் வரை வா வாத்தியார் திரைப்படத்தை வெளியிடக்கூடாது என் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல், வா வாத்தியார் திரைப்படத்தை அனைத்து ஓடிடி தளங்களிலும் வெளியிட அனுமதி இல்லை.

திவாலான தொழிலதிபர் அர்ஜூன்லால் சுந்தர் தாஸ் என்பவரிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் படத்தை வெளியிடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தன்னிடம் வாங்கிய கடனை வட்டியுடன் சேர்த்து ரூ.21.78 கோடி பணத்தை வழங்க தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் என அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News