தமிழ்நாடு செய்திகள்

இந்தியாவுக்கே சமூகநீதி வெளிச்சத்தை பாய்ச்சியவர் வி.பி.சிங் - உதயநிதி புகழாரம்

Published On 2025-06-25 11:18 IST   |   Update On 2025-06-25 11:18:00 IST
  • இந்தியாவின் அரசியல் போக்கையே தலைகீழாகப் புரட்டிப்போட்ட புரட்சியாளர் வி.பி.சிங்.
  • சிறப்புக்குரிய வி.பி.சிங் அவர்களுக்கு முதலமைச்சர் சென்னையில் வங்கக்கடலோரம் ஆளுயர சிலை வைத்து பெருமை சேர்த்தார்கள்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

சாமானியர்களின் கைகளில் அதிகாரத்தை கொண்டு சேர்க்க தனக்கு கிடைத்த பிரதமர் பொறுப்பை பயன்படுத்திய சமூகநீதி காவலர் வி.பி.சிங் அவர்களின் பிறந்தநாள் இன்று!

மண்டல் குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்தியதன் மூலம் இந்தியாவின் அரசியல் போக்கையே தலைகீழாகப் புரட்டிப்போட்ட புரட்சியாளர்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உற்ற நண்பராக திகழ்ந்து இந்தியாவுக்கே சமூகநீதி வெளிச்சத்தை பாய்ச்சியவர்.

சமூகநீதி மற்றும் மதசார்பின்மையின் பக்கம் உறுதியாக நின்று ஆட்சி புரிந்து, அதன் காரணமாகவே பதவியையும் இழந்த தியாக வரலாற்றுக்கு சொந்தக்காரர்.

இத்தகைய சிறப்புக்குரிய வி.பி.சிங் அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வங்கக்கடலோரம் ஆளுயர சிலை வைத்து பெருமை சேர்த்தார்கள்.

உயரிய அதிகாரப் படிக்கட்டுகளில் எளிய மக்களை ஏற்றிவிட்ட வி.பி.சிங் அவர்களின் புகழ் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நெஞ்சங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News