தமிழ்நாடு செய்திகள்

இ.பி.எஸ். சுற்றுப்பயணம் வெள்ளை வேட்டி, சட்டையில் தொடங்கி காவி நிறத்திற்கு மாறி விட்டது - உதயநிதி

Published On 2025-07-13 14:42 IST   |   Update On 2025-07-13 14:42:00 IST
  • அண்ணா பெயரில் கட்சியை வைத்துக்கொண்டு அமித்ஷாவிடம் அடகு வைக்கப்பட்டு விட்டது அ.தி.மு.க.
  • ரும் சட்டசபை தேர்தலில் அடிமைகளையும் பாசிஸ்டுகளையும் தமிழக மக்கள் ஒருசேர வீழ்த்துவார்கள்.

திருவண்ணாமலையில் நடக்கும் பூத் முகவர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

* இ.பி.எஸ். போல் அமித்ஷா வீட்டு கதவை திருட்டுத்தனமாக தட்டவில்லை. மக்களின் வீட்டு கதவுகளை உரிமையோடு தட்டுகிறது தி.மு.க.

* அமித்ஷா வீட்டு கதவையோ, கமலாலயத்தின் கதவையோ தட்டாமல் மக்களின் வீட்டு கதவுகளை உரிமையோடு தட்டுகிறது தி.மு.க.

* எடப்பாடி பழனிசாமி ஓடி ஒளிந்து பா.ஜ.க.வுடன் கள்ள கூட்டணி வைத்த நிலையில் அதில் ஒற்றுமை இல்லாத சூழல் உள்ளது.

* அண்ணா பெயரில் கட்சியை வைத்துக்கொண்டு அமித்ஷாவிடம் அடகு வைக்கப்பட்டு விட்டது அ.தி.மு.க.

* கோவில் பணத்தில் கல்லூரி கட்டலாமா எனக்கேட்டு முழு சங்கியாகவே எடப்பாடி பழனிசாமி மாறி விட்டார்.

* வரும் சட்டசபை தேர்தலில் அடிமைகளையும் பாசிஸ்டுகளையும் தமிழக மக்கள் ஒருசேர வீழ்த்துவார்கள்.

* தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு பாதை போட்டு கொடுக்கிறார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

* தேர்தல் களத்தில் தி.மு.க. முந்துவதால் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதற்றம் வந்துவிட்டது.

* எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் வெள்ளை வேட்டி சட்டையில் தொடங்கி காவி நிறத்திற்கு மாறி விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News