தமிழ்நாடு செய்திகள்

கரூரில் பரபரப்பு: த.வெ.க. கூட்டத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு?- அமைச்சர்களை நேரில் செல்ல முதலமைச்சர் உத்தரவு

Published On 2025-09-27 20:19 IST   |   Update On 2025-09-27 21:44:00 IST
  • நாமக்கல்லில் இன்று பிற்பகலில் தேர்தல் பரப்புரை நடத்தினார்.
  • கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் விஜய் தனது பரப்புரையை தொடங்கினார்.

கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் பலர் மயக்கமடைந்து உள்ளனர். மயக்கமடைந்தவர்கள் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் மருத்துவமனையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

மருத்துவமனையில் தவெக தொண்டர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கரூரில் உள்ள அனைத்து ஆம்புலன்ஸ் வாகனங்களும், மயக்கமுற்ற நபர்களை ஏற்றிச் செல்வதற்காக வேலுச்சாமிபுரத்திற்கு வந்தவண்ணம் உள்ளன.

கரூருக்கு உடனே செல்லும்படி அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மயக்கமடைந்தவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News