தமிழ்நாடு செய்திகள்

விஜயின் கரூர் பிரசார கூட்டத்தில் நெரிசல்: 10 பேர் உயிரிழந்த சோகம்

Published On 2025-09-27 20:36 IST   |   Update On 2025-09-27 21:44:00 IST
  • கட்டுங்கடங்காக கூட்டம் கூடியதால் நெரிசல் ஏற்பட்டது.
  • கூட்டம் கலைந்து செல்லும்போது நெரிசல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்றிரவு கரூர் மாவட்டத்தில் மக்களை சந்தித்து உரையாற்றினார். விஜய் வேன் அருகே கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இதனால் விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே, பெண் ஒருவர் மயக்கம் அடைந்தார். அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த நிலையில் சுமார் 10 பேர் உயிரிழந்ததாக அச்சமான செய்தி வெளியாகியுள்ளது. மேலும், பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உயிரிழந்ததில் 3 குழந்தைகள் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News