தமிழ்நாடு செய்திகள்

தாய்மார்கள், தம்பி தங்கைகள் உனது அரசியல் வெற்றிக்கு துணை நிற்கட்டும்- விஜய்க்கு தாய் வாழ்த்து

Published On 2025-08-21 10:13 IST   |   Update On 2025-08-21 10:13:00 IST
  • திரையில் உன்னை பார்த்து உயர்த்திய தாய்மார்கள், தம்பி தங்கைகள் அரசியல் வெற்றிக்கு துணை நிற்கட்டும்.
  • தமிழக வெற்றிக் கழகம் தடைகளை வெல்லும் கழகம் என்று காட்டு.

மதுரையில் இன்று த.வெ.க. 2-வது மாநில மாநாடு நடைபெறுகிறது. விடியற்காலையிலேயே ஏராளமான தொண்டர்கள் மாநாட்டு மேடைக்கு முன்பாகத் திரண்டுள்ளனர்.

இந்நிலையில் தவெக மாநாடு வெற்றி பெற தவெக தலைவர் விஜய்க்கு அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

திரையில் உன்னை பார்த்து உயர்த்திய தாய்மார்கள், தம்பி தங்கைகள் அரசியல் வெற்றிக்கு துணை நிற்கட்டும்.

வரவிருக்கும் தேர்தல் உன் இமாலய வெற்றியை காட்டும், நீ அரியணை ஏறும் நாள் வரும்.. அது உன் தொண்டர்களின் திருநாள்

தமிழக வெற்றிக் கழகம் தடைகளை வெல்லும் கழகம் என்று காட்டு, நேர்மையான தலைவன் என்பதற்கு நீதான் எடுத்துக்காட்டு

உன்னோடு வரும் தொண்டர் படை இந்த நாட்டில் வேறு யாருக்கும் இல்லை, உன் வெற்றிக்கு வானமே எல்லை.. வாழ்த்துகள் விஜய்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News