தமிழ்நாடு செய்திகள்

விஜய் பிரசார பயணத்திட்டத்தில் மாற்றமா? - வெளியான புதிய தகவல்

Published On 2025-09-16 11:53 IST   |   Update On 2025-09-16 12:00:00 IST
  • சென்னையில் விஜய் சுற்றுப்பயணம் செய்யப்போவதாக த.வெ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  • கடந்த சனிக்கிழமை அன்று திருச்சி, அரியலூர் பகுதிகளில் விஜய் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்தார்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க போவதாகவும், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, கடந்த சனிக்கிழமை அன்று திருச்சி, அரியலூர் பகுதிகளில் விஜய் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்தார்.

இதேபோல் சென்னையிலும் விஜய் சுற்றுப்பயணம் செய்யப்போவதாக த.வெ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. செப்டம்பர் 27-ந்தேதியன்று வட சென்னையிலும், அக்டோபர் 25-ந்தேதியன்று தென் சென்னையிலும் சாலை மார்க்கமாக சென்று விஜய் மக்களை சந்திக்க அனுமதி கேட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜயின் தேர்தல் பிரசார சுற்றுப்பயண திட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு நாளில் 4 மாவட்டங்களுக்கு செல்லும் திட்டத்தை மாற்றி ஒருநாளில் 2 மாவட்டங்களுக்கு மட்டும் செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜயின் தேர்தல் பிரசார பயணம் குறித்து புதிய அட்டவணை தயாரிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News