தனிப்பட்ட முறையில் நயினார் நாகேந்திரன் எனக்கு நல்ல நண்பர்- டி.டி.வி.தினகரன்
- அண்ணாமலை கட்சியை அரவணைத்து செல்கிறார்.
- நண்பராக நயினார் நாகேந்திரன் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம்.
விருதுநகரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றது தமிழ்நாட்டிற்கு பெருமையும் மகிழ்ச்சியும் சேர்க்கின்ற விஷயம். அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் மட்டும் அல்ல, அவர் ஒரு நேர்மையான நல்ல மனிதர். அவர் வெற்றி பெற்றது உண்மையிலேயே மகிழ்ச்சி.
தனிப்பட்ட முறையில் எனக்கு நல்ல நண்பர் நயினார் நாகேந்திரன். கூட்டணியில் இருந்து நான் வெளியேறும்போது எல்லா காரணங்களையும் சொன்னேன். தனிப்பட்ட முறையில் எனக்கும் அவருக்கும் எந்தவிதமான மனவருத்தமும் கோபமும் கிடையாது. ஒரு நண்பராக அவர் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம்.
அண்ணாமலை கட்சியை அரவணைத்து செல்கிறார். செங்கோட்டையனின் நல்ல முயற்சி வெற்றி பெற வேண்டும் என்பது அம்மாவின் தொண்டர்கள் அனைவரின் விருப்பம். அவரது முயற்சி கண்டிப்பாக வெற்றி அடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.