தமிழ்நாடு செய்திகள்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக போக்குவரத்து மாற்றம்
- போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர்.
- கனரக வாகனங்களுக்கான மாற்றுப் பாதை மற்றும் புறப்பாடுப் பயண விபரங்களையும் வெளியிட்டுள்ளது.
சென்னை :
தீபாவளியை பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பொதுமக்கள் பயணம் மேற்கொள்வார்கள். ஒரே நேரத்தில் பொதுமக்கள் சென்னையில் இருந்து புறப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர்.
அந்த வகையில், தீபாவளியை முன்னிட்டு வருகிற17,18,21,22 ஆகிய தேதிகளில் கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தாம்பரம் மாநகர காவல் அறிவித்துள்ளது. மேலும், கனரக வாகனங்களுக்கான மாற்றுப் பாதை மற்றும் புறப்பாடுப் பயண விபரங்களையும் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-