Tamil News Live: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு
நாமக்கல்லில் மக்களிடையே உரையாற்றிய விஜய், பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு என்ன செய்தது. நீட் தேர்வை ஒழித்து விட்டார்களா? கல்வி நிதியை கொடுத்தார்களா?" என்று தெரிவித்தார்.
நாமக்கல்லில் மக்களிடையே உரையாற்றிய விஜய், "2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் இடையே தான் போட்டி" என்று மீண்டும் தெரிவித்தார்.
நாமக்கல்லில் மக்களிடையே உரையாற்றிய விஜய், "தேர்தலில் திமுகவுக்கு ஓட்டு போடுவது பாஜகவுக்கு ஓட்டு போடுவதற்கே சமம்" என்று தெரிவித்தார்.
நாமக்கல்லில் மக்களிடையே உரையாற்றிய விஜய், "பாசிச பாஜகவுடன் எப்போதும் ஒத்துப்போக மாட்டோம், திமுக போல் மறைமுக உறவுக்காரராக இருக்கமாட்டோம். 300 தடவை அம்மா..அம்மா.. என சொல்லிக்கொண்டு பொருந்தா கூட்டணியாக பாஜகவுடன் இணைந்த அதிமுகவை போல்... ஜெயலலிதா கூறிய அனைத்தையும் மறந்துவிட்டு அதிமுக பொருந்தா கூட்டணி வைத்துள்ளது" என்று தெரிவித்தார்.
நாமக்கல்லில் மக்களிடையே உரையாற்றிய விஜய், "திமுகவை போல் பொய் வாக்குறுதிகளை என்றும் சொல்ல மாட்டோம். புதிதாக என்ன சொல்வது? செவ்வாய் கிரகத்தில் ஐ.டி கட்டப்படும், காற்றில் வீடு கட்டப்படும் என அடித்துவிடுவோமா? முதல்வர் சொல்வது போல பொய்யான வாக்குறுதிகளை அடித்து விடுவோமா என தொண்டர்களை நோக்கி கேள்வி எழுப்பினார்.
நாமக்கல்லில் மக்களிடையே உரையாற்றிய விஜய், "தவெக ஆட்சி அமைந்த உடன் அடிப்படை சாலைவசதி, குடிநீர், மருத்துவம் و பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் சமரசம் இருக்காது" என்று தெரிவித்தார்.
நாமக்கல்லில் மக்களிடையே உரையாற்றிய விஜய், "திமுக நிர்வாகிக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடந்துள்ளதாக கூறுகிறார்கள். ஏழை பெண்களை குறிவைத்து கிட்னி திருட்டு நடந்துள்ளது என சொல்கிறார்கள். தவெக ஆட்சி அமைந்த உடன் கிட்னி திருட்டு தொடர்புடைய ஒவ்வொருவரும் கைது செய்யப்படுவர்" என்று தெரிவித்தார்.