தமிழ்நாடு செய்திகள்
LIVE

Tamil News Live: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு

Published On 2025-09-27 09:48 IST   |   Update On 2025-09-29 13:24:00 IST
2025-09-27 09:25 GMT

நாமக்கல்லில் கிட்னி திருட்டு விவகாரத்தில் திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தவெக தலைவர் விஜய் சாடல்

2025-09-27 09:21 GMT

நாமக்கல்லில் மக்களிடையே உரையாற்றிய விஜய், "தானிய சேமிப்பு கிடங்குகள், கொள்முதல் நிலையங்கள் இணைக்கப்படும் என சொன்னார்கள் செய்தார்களா? கொப்பரை தேங்காய்கள், வெல்லம் ரேஷன் கடை மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை என சொன்னார்கள் செய்தார்களா? நாட்டுச்சக்கரை ரேஷன்கடைகளில் விநியோகம், போக்குவரத்து ஊழியர்களுக்கும் பழைய பென்ஷன் திட்டம் ... செய்தார்களா?" என்று தெரிவித்தார்.

2025-09-27 09:18 GMT

நாமக்கல்லில் மக்களிடையே உரையாற்றிய விஜய், "ஒவ்வொரு ஒன்றியத்திலும் தானியக் கிடங்கு அமைக்கப்படும் என்ற வாக்குறுதி கொடுத்தார்களே செய்தார்களா?" என்று தெரிவித்தார். 

2025-09-27 09:17 GMT

நாமக்கல்லில் மக்களிடையே உரையாற்றிய விஜய், "பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிமையைப் பெற்றுக்கொடுத்த முன்னாள் முதல்வர் சுப்பராயன் பிறந்த மண் நாமக்கல்" என்று தெரிவித்தார். 

2025-09-27 09:16 GMT

நாமக்கல்லில் மக்களிடையே உரையாற்றிய விஜய், "லாரி பாடி கட்டும் தொழிலில் இருந்து அதிக தொழில்கள் செய்யும் ஊர் நாமக்கல்" என்று தெரிவித்தார்.

2025-09-27 09:15 GMT

நாமக்கல் மக்களிடம் உரையாற்றிய விஜய் தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டார். அதன் பிறகு தொண்டர்களிடம் 'அனைவரும் சாப்பிட்டீர்களா' என்று கேட்டார்.

Tags:    

Similar News