தமிழ்நாடு செய்திகள்
LIVE

Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...

Published On 2025-09-20 09:22 IST   |   Update On 2025-09-20 22:01:00 IST
2025-09-20 08:37 GMT

நாகை புத்தூர் ரவுண்டானா அண்ணா சிலை சந்திப்பில் திரண்டுள்ள தொண்டர்களுக்கு மத்தியில் உரையாற்றிய விஜய், "திருச்சி, அரியலூர் நடந்த வாரம் சென்றிருந்தேன், பெரம்பலூர் பகுதிக்கு வர முடியாததற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். பேருந்துக்குள் இருக்கவேண்டும், வெளியில் வரக்கூடாது, கையை அசைக்காதே... மக்களை பார்த்து சிரிக்காதே என காமெடியாக நிபந்தனை விதிக்கிறார்கள். குடும்பத்தை வைத்து கொள்ளையடிக்கும் உங்களுக்கே இவ்வளவு என்றால் சொந்தமாக உழைத்து சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்?” என்று தெரிவித்தார்.

2025-09-20 08:35 GMT

நாகை புத்தூர் ரவுண்டானா அண்ணா சிலை சந்திப்பில் திரண்டுள்ள தொண்டர்களுக்கு மத்தியில் உரையாற்றிய விஜய், "உங்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் சந்திக்க வரவேண்டும் என்பதற்காக தான் சனிக்கிழமையில் வருகிறேன். அரசியலில் சிலருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் ஓய்வுநாளில் உங்களை சந்திக்க வருகிறேன். அதை பேசாதீர்கள், இதை பேசாதீர்கள் என்றால் நான் எதைத்தான் பேசுவது" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News