தமிழ்நாடு செய்திகள்
நவீன் பட்நாயக் விரைவில் நலம்பெற வேண்டுகிறேன்: முதல்வர் ஸ்டாலின்
- நவீன் பட்நாயக் கடந்த வாரம் கழுத்து வலியால் அவதிப்பட்டார்.
- மும்பை மருத்துவமனையில் அவருக்கு முதுகெலும்பு அறுவை சிகிச்சை நடந்தது.
சென்னை:
பிஜூ ஜனதா தள கட்சியின் தலைவரும், ஒடிசா முன்னாள் முதல் மந்திரியுமான நவீன் பட்நாயக் கடந்த வாரம் கழுத்து வலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து, கடந்த 20-ம் தேதி மும்பை சென்ற நவீன் பட்நாயக் அங்குள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சமீபத்தில் முதுகெலும்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
இதற்கிடையே, நவீன் பட்நாயக் நலமுடன் உள்ளார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், ஒடிசா முன்னாள் முதல் மந்திரி நவீன் பட்நாயக்கிறகு அறுவை சிகிச்சை செய்த டாக்டரிடம் ஆலோசனை நடத்தினேன். விரைவில் நலம்பெற வேண்டுகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.