காற்று மாசு குறைந்த நகரில் திருப்பூருக்கு முதன்மை இடம்- ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகி தகவல்
- ஜவுளித்துறையில் வளம் குன்றா வளர்ச்சி மற்றும் போட்டித்தன்மையை ஆதரிப்பதற்கு ஏற்றுமதியாளர்கள் சங்கம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது
- கடந்த கோடையில் கோவையை விட 2 டிகிரி செல்சியஸ் குறைவாக இருந்தது.
திருப்பூர்:
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் குமார் துரைசாமி கூறியதாவது:-
ஜவுளித்துறையில் வளம் குன்றா வளர்ச்சி மற்றும் போட்டித்தன்மையை ஆதரிப்பதற்கு ஏற்றுமதியாளர்கள் சங்கம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. திருப்பூர் தொழில்வளம் பங்களிப்போர் அமைப்பினரும் உதவி வருகிறார்கள். மார்பக, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பரிசோதனைகள் வழங்கும் பணிகளை பெண்கள் தொழில்முனைவோர் துணை அமைப்பினர் மேற்கொண்டுள்ளனர். இந்த விழிப்புணர்வு மூலமாக 5 ஆயிரம் பெண்கள் பயன்பெற்றுள்ளனர்.
உலகளாவிய காற்று மாசுபாடு குறைவாக உள்ள நகரம் தொடர்பாக கடந்த ஆண்டு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. இந்தியாவில் 3 நகரங்களில் காற்று மாசுபாடு குறைவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதில் திருப்பூர் முதன்மை இடத்தில் உள்ளது. சுற்றுச்சூழல் ஆய்வின்படி வனத்துக்குள் திருப்பூர் திட்டம் மூலமாக திருப்பூரில் வெப்பநிலை கடந்த கோடையில் கோவையை விட 2 டிகிரி செல்சியஸ் குறைவாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.