தமிழ்நாடு செய்திகள்
null
'அரோகரா' கோஷங்களுடன் விண்ணில் மிளிரியது திருவண்ணாமலை மகாதீபம்!
- ஞான தபோதனரை வாவென்றழைக்கும் திருவண்ணாமலையின் சிறப்பு என்பது கார்த்திகைத் தீபத் திருவிழா
- 2668 அடி மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது.
ஞான தபோதனரை வாவென்றழைக்கும் திருவண்ணாமலையின் சிறப்பு என்பது கார்த்திகைத் தீபத் திருவிழா ஆகும். இது உலக பிரசித்தி பெற்றது. இத்திருவிழா திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் உச்ச நிகழ்ச்சியாக இன்று அதிகாலை 4 மணியளவில் அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அண்ணாமலையாரை அரோகரா பக்தி கோஷத்துடன் வழிபட்டனர். அதனைத்தொடர்ந்து தற்போது 2668 அடி மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது.