தமிழ்நாடு செய்திகள்

கோமியம் குடித்தால் டாஸ்மாக் விற்பனை குறையும்- தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2025-01-21 13:36 IST   |   Update On 2025-01-21 13:36:00 IST
  • மாட்டுக்கறியை சாப்பிடுவர், மாட்டு சாணத்தை பயன்படுத்துவர்.
  • ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படும் கோமியத்தை பயன்படுத்தக்கூடாது என பேசுகின்றனர்.

சென்னை:

மாட்டு கோமியம் குடிப்பது நல்லது என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையாகி உள்ளது. பலரும் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் புத்தக வெளியீட்டு விழாவில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:

* கோமியம் குடித்தால் டாஸ்மாக் விற்பனை குறைந்து விடும் என நினைக்கிறார்கள்.

* மாட்டுக்கறியை சாப்பிடுவர், மாட்டு சாணத்தை பயன்படுத்துவர். மாட்டின் கோமியம் மருந்து என்றால் எதிர்க்கிறார்கள்.

* விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்ந்து ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படும் கோமியத்தை பயன்படுத்தக்கூடாது என பேசுகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News