தமிழ்நாடு செய்திகள்

மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு

Published On 2025-02-17 14:55 IST   |   Update On 2025-02-17 14:55:00 IST
  • சிவப்பு நிறத்தில் எக்ஸ்பிரஸ் பேருந்துகளாக உள்ள 174 மாநகரப் பேருந்துகளை விடியல் பயணத்திட்ட பேருந்துகளாக மாற்ற முடிவு.
  • வருவாய் குறைவான பேருந்துகளை மகளிர் கட்டணமில்லா பேருந்துகளாக மாற்றப்பட உள்ளது.

சென்னையில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

சிவப்பு நிறத்தில் எக்ஸ்பிரஸ் பேருந்துகளாக உள்ள 174 மாநகரப் பேருந்துகளை விடியல் பயணத்திட்ட பேருந்துகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

வருவாய் குறைவான பேருந்துகளை மகளிர் கட்டணமில்லா பேருந்துகளாக மாற்றப்பட உள்ளது.

சென்னை மாநகர பேருந்துகளில் பெண் பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மகளிர் பேருந்துகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

விடியல் பயண பேருந்துகளின் பயணியர் எண்ணிக்கையில் சராசரியாக 63 சதவீத பெண் பயணியர் எண்ணிக்கையாக உள்ளனர்.

Tags:    

Similar News