சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை- 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
- சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
- ஆவடியில் இருந்து பூந்தமல்லி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், திடீரென மழை பெய்து வருகிறது.
சென்னையில் கோயம்பேடு, மதுரவாயல், நெற்குன்றம், வளசரவாக்கம், வானகரம், போரூர், ஐயப்பந்தாங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
மேலும், புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, நசரத்பேட்டை, திருவேற்காடு, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காஞ்சிப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், சேலம், தருமபுரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
திருப்பத்தூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களிலும் மாலை 6 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் வெயிலுக்காக சாலையில் போக்குவரத்து காவல்துறையால் அமைக்கப்பட்ட பந்தல் மலைக்காற்றில் சரிந்தது. இதனால், ஆவடியில் இருந்து பூந்தமல்லி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.