தமிழ்நாடு செய்திகள்

மாநில அளவிலான வாள் விளையாட்டு போட்டி- விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்

Published On 2025-10-25 21:36 IST   |   Update On 2025-10-25 21:37:00 IST
  • P.K. சிந்துகுமார் கன்னியாகுமரி மாவட்ட வாள் விளையாட்டு கழகதலைவர் தலைமையில் நடைபெற்றது.
  • அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

தமிழ்நாடு வாள் விளையாட்டு கழகம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வாள் விளையாட்டு கழகம் நடத்தும் சீனியர் பிரிவிற்கான மாநில அளவிலான வாள் விளையாட்டுப் போட்டி ஆற்றூர், கல்லுப்பாலம் பகுதியில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட வாள் விளையாட்டு கழக பயிற்சி மையத்தில் 25 மற்றும் 26 ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது.

அதன்படி இன்று P.K. சிந்துகுமார் கன்னியாகுமரி மாவட்ட வாள் விளையாட்டு கழகதலைவர் தலைமையில் நடைபெற்றது. கன்னியாகுமரி வாள் விளையாட்டு கழக செயலாளர் அமிர்தராஜ், சுந்தர்ராஜ், இணைச்செயலாளர் ஜோபின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாள் விளையாட்டு கழக இணைச்செயலாளர் செல்வி இலக்கியா வரவேற்புரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.

விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கட்பர்ட், கன்னியாகுமரி மாவட்ட வாள் விளையாட்டு கழக தலைவர் சிந்துகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினர்.

இந்நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

Tags:    

Similar News