தமிழ்நாடு செய்திகள்

காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சி: சென்னையில் இருந்து பனாரசுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்

Published On 2025-11-23 04:58 IST   |   Update On 2025-11-23 04:58:00 IST
  • சென்டிரலில் இருந்து டிசம்பர் 2-ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படும்.
  • இந்த சிறப்பு ரெயில் மறுநாள் இரவு 11.15 மணிக்கு பனாரஸ் சென்றடையும்.

சென்னை:

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் டிசம்பர் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 'காசி தமிழ் சங்கமம் 4.0' நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி, சென்னையில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை சென்டிரலில் இருந்து டிசம்பர் 2-ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் இரவு 11.15 மணிக்கு பனாரஸ் சென்றடையும்.

பனாரசில் இருந்து 7-ம் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் 9-ம் தேதி இரவு 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.

இதேபோல, சென்டிரலில் இருந்து டிசம்பர் 6-ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் ரெயில் 7-ம் தேதி இரவு 11.15 மணிக்கு பனாரஸ் சென்றடையும். மறு மார்க்கமாக பனாரசில் இருந்து டிசம்பர் 11-ம் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் 13-ம் தேதி இரவு 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.

சென்னை சென்டிரலில் இருந்து டிசம்பர் 12-ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் 13-ம் தேதி இரவு 11.15 மணிக்கு பனாரஸ் சென்றடையும். மறு மார்க்கமாக பனாரசில் இருந்து டிசம்பர் 17-ம் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் 19-ம் தேதி இரவு 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News