தமிழ்நாடு செய்திகள்
தீபாவளிக்கு 24,607 சிறப்பு பஸ்கள் - போக்குவரத்து துறை ஆலோசனை
- நாளை முதல் வரும் 30-ந் தேதி வரை 3,225 சிறப்பு பஸ்கள் உள்பட 11,593 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
- 9,963 சிறப்பு பஸ்கள் உட்பட மொத்தம் 24,607 பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னை:
ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவது தொடர்பாக நேற்று தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி, நாளை முதல் வரும் 30-ந் தேதி வரை 3,225 சிறப்பு பஸ்கள் உள்பட 11,593 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
தீபாவளி பண்டிகைக்கு, சென்னையில் இருந்து அக்டோபர் 16-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 4,253 சிறப்பு பஸ்கள் உள்பட 10,529 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதாவது, 9,963 சிறப்பு பஸ்கள் உட்பட மொத்தம் 24,607 பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அடுத்த மாதம் முதல் வாரத்தில், போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிடுவார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.