தமிழ்நாடு செய்திகள்

பெண்களுக்கு விதிக்கக்கூடிய கட்டுப்பாடுகளை உங்கள் மகன்களுக்கும் விதியுங்கள்- சௌமியா அன்புமணி

Published On 2025-08-11 12:37 IST   |   Update On 2025-08-11 12:37:00 IST
  • கட்சி, சமூகத்தை தாண்டி நாம் குழந்தைகளை கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டும்.
  • குழந்தைகளோட பாதுகாப்பையும் அம்மாவாகிய நாம் தான் உறுதி செய்ய வேண்டும்.

கடத்தூர்:

தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பசுமைத் தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

"தேர்தல் நேரங்களில் தருமபுரி பகுதிகளில் நான் போகாத ஊர்களே இல்லை. சாயங்காலம் 6 மணி ஆனால், போதையில் தள்ளாடும் இளைஞர்களை நான் பார்க்கும்போது மனசெல்லாம் வலிக்கும். அய்யோ இந்த தலைமுறை இப்படி போகுதே... நம் கண் எதிரே நம் குழந்தைகள் இப்படி போகுதேன்னு பரிதாபமாக இருக்கும்.

ஒரு தலைமுறையை குடிக்கு அடிமையாக உள்ளது. அதைவிட மோசம் போதை. போதையில் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாது. குடித்தால் கூட நாற்றம், கண் சிவக்கும்... ஆனால் போதையில் எதுவும் தெரியமாட்டேங்குது. போதை மாத்திரைகள் எல்லாம் பள்ளி, கல்லூரிகளின் அருகிலேயே கிடைக்கிறது என்பதால் நாம் குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பாது? கட்சி, சமூகத்தை தாண்டி நாம் குழந்தைகளை கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டும். குழந்தைகளோட பாதுகாப்பையும் அம்மாவாகிய நாம் தான் உறுதி செய்ய வேண்டும். அவர்கள் சமூக வலைத்தளத்தில் எவ்வாறு பயணிக்கிறார்கள். அவர்களுடைய நண்பர்கள் யார்? வீட்டிற்கு எப்போது வருகிறார்கள் போன்றும் பெண்களுக்கு விதிக்கக்கூடிய கட்டுப்பாடுகளை உங்கள் மகன்களுக்கும் விதியுங்கள். 6 மணிக்கு பொண்ணு வீட்டுக்கு வரணும்னா... பையனும் அதே மாதிரிதான். இரண்டு பேருக்கும் ஒரே கட்டுப்பாடுதான் இருக்கணும். பொண்ணுக்கு சமைக்க கற்றுக்கொடுத்தால், பையனுக்கும் சமைக்க கற்றுக்கொடுங்கள். எந்த ஒரு பாகுபாடு எல்லாம் பெண் குழந்தைகளையும், ஆண் குழந்தைகளையும் வளர்க்க வேண்டும் என்றார். 

Tags:    

Similar News